சம்பளத்தை குறைத்த நடிகர் பிரபாஸ்.. ஏன் தெரியுமா?


சம்பளத்தை குறைத்த நடிகர் பிரபாஸ்.. ஏன் தெரியுமா?
x

நடிகர் பிரபாஸ் இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். 'பாகுபலி' படத்துக்கு பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக மாறிப்போன பிரபாசுக்கு, சில படங்கள் தோல்வியடைந்ததால் 'மார்க்கெட்' சரிந்தது.

அதனைத்தொடர்ந்து 'சலார்' படம் வெளியாகி அவருக்கு மீண்டும் 'ஸ்டார்' அந்தஸ்தை கொடுத்தது. 'கல்கி 2898 ஏ.டி.' படத்தின் 'ஹிட்' அவருக்கான 'மார்க்கெட்'டை இன்னும் மேலே கொண்டு சென்றது.

பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், முதன்முறையாக திகில் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்திருக்கும் பிரபாஸ், இந்த படத்துக்காக அவருடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டு இருக்கிறாராம். வழக்கமாக ஒரு படத்துக்கு ரூ.150 கோடி சம்பளம் பெறும் பிரபாஸ், 'தி ராஜா சாப்' படத்துக்கு ரூ.100 கோடி மட்டுமே சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாசின் சம்பளம் குறைப்புக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். படத்தின் வெற்றியில் பங்கு இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

1 More update

Next Story