நடிகர் ஷான் நடிக்கும் “ரேஜ்” படத்தின் டைட்டில் லுக் வெளியீடு


நடிகர் ஷான் நடிக்கும் “ரேஜ்” படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
x

நடிகர் ஷான் அதிரடி ஆக்சன் வேடத்தில் நடிக்கும்‘ரேஜ்’ திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' எனும் திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.எம். எஸ். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அனாமிகா ரவீந்திரநாத்- அபிஷேக் ரவீந்திரநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் லுக்கில் ‘இயல்புக்கு மீறிய காதல் கதை’ என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

1 More update

Next Story