நடிகர் ''டெலிபோன்'' சுப்பிரமணி காலமானார்


actor Telephone Subramani passes away
x
தினத்தந்தி 11 Jun 2025 4:30 AM IST (Updated: 11 Jun 2025 5:23 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் 'டெலிபோன்' சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்.

சென்னை,

''எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'', ''யுனிவர்சிட்டி'', ''எலி'' மற்றும் விவேக் உடன் பல படங்களில் நடித்தவர் ''டெலிபோன்'' சுப்பிரமணி (67).

சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் 'டெலிபோன்' சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், உடல்நலம் மோசமடைந்து நேற்று மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் டெலிபோன் சுப்பிரமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story