அஜித்துடன் நடிக்க விரும்பும் “துப்பாக்கி” பட நடிகர்

பில்லா பட காலகட்டத்தில் தன்னைப்பற்றி அஜித் பேசியுள்ளதாக நடிகர் வித்யூத் ஜம்வால் கூறியுள்ளார்.
அஜித்துடன் நடிக்க விரும்பும் “துப்பாக்கி” பட நடிகர்
Published on

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமானஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த நிலையில், பிரபல பான் இந்திய நடிகரான வித்யூத் ஜம்வால் நிகழ்ச்சியொன்றில், நான் தமிழில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், நான் முன்னணி நடிகராக வருவதற்கு முன்பே பில்லா காலகட்டத்தில் என்னைப் பற்றி அஜித் பேசியிருக்கிறார். அவருடன் நடிக்க விருப்பம் எனத் தெரிவித்துள்ளார். .

இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி படங்களில் நடித்துள்ளார். இவர் ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com