"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் விநாயகன்

நடிகர் விநாயகன் தற்போது மம்முட்டியுடன் இணைந்து ‘களம் காவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானவர் விநாயகன். இவர் திமிரு மற்றும் பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படம் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது.
இவர் தற்போது மம்முட்டியுடன் இணைந்து ‘களம் காவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது. அதற்காக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் விநாயகன் பேசும்போது, "ஜெயிலர் 2 படம் பற்றி எல்லோரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், நான் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். அது ஒரு பிளாஷ்பேக் கதையா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் என்னை படத்தில் பார்ப்பீர்கள். ஜெயிலர் படத்தில் நடித்தது தான் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கதாபாத்திரம். இயக்குனர் நெல்சன் இந்த முறை பெரிய அளவில் ஏதோ செய்கிறார் போலிருக்கிறது. அவர் என்ன செய்துவருகிறார் என்பதைப் பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று அவர் பேசியுள்ளார்.






