மேலாளரை நீக்கிய நடிகை அனசுயா... வைரலாகும் இன்ஸ்டா பதிவு

ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அனசுயா இப்போது நடிகையாக இருக்கிறார்.
சென்னை,
நடிகை அனுசுயா பரத்வாஜ் திரைப்படங்களிலும் , தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கிறார். ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இப்போது நடிகையாக இருக்கிறார்.
இருப்பினும் இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சமூக ஊடகங்களில் அவர் அடிக்கடி, தனது திரைப்பட அப்டேட்டுகள் மற்றும் தனிப்பட்ட விடியங்களைப் பகிர்ந்து கொள்வார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் அனசுயா பதிவிட்ட ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது மேலாளரை நீக்கியதாக தெரிவித்திருக்கிறார்.
‘எனது பயணத்தில் என்னுடன் இருந்த மகேந்திரா, மேலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பல ஆண்டுகால முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் அவருக்கு மனமார்ந்த நன்றி கூறுகிறேன்’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Related Tags :
Next Story






