திருமலை - படிகளில் முழங்கால்களால் ஏறிய நடிகை...வைரலாகும் வீடியோ

இவர் ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்
திருமலை,
நடிகை சுரேகா வாணி தமிழில், காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்
தற்போது படங்களில் அதிகம் காணப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில், சுரேகா தனது மகளுடன் திருமலைக்கு சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்தார்.
மேலும், முழங்கால்களால் திருமலை படிகளில் ஏறும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தாய் மற்றும் மகளின் பக்தியைக் கண்டு வியப்படைந்துள்ளனர். தற்போது, இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Related Tags :
Next Story






