திருவண்ணாமலை கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்


திருவண்ணாமலை கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்
x

கோவில் நிர்வாகம் சார்பில் நடிகை ஸ்ரீலீலாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'குர்ச்சி மாடதபெட்டி, கிஸ்ஸிக்' போன்ற பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.

தற்போது, சிவகார்த்திகேயனுடன் இணைந்து பராசக்தி படத்திலும், ரவி தேஜாவுடன் இணைந்து மாஸ் ஜதாரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த ஸ்ரீலீலாவுடன் பக்தர்கள் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story