17 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு...விவாகரத்தை அறிவித்த பிரபல நடிகர்

நடிகர் ஷிஜு ஏ.ஆர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
சென்னை,
திரைத்துறையில் மற்றொரு ஹீரோ விவாகரத்து செய்துள்ளார். மலையாள நடிகர் ஷிஜு ஏ.ஆர் தனது மனைவி பிரீத்தியை விவாகரத்து செய்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துள்ளதாகவும் , ஆனாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷிஜுவின் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரீத்தி விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியபோது, தற்செயலாக ஹீரோ ஷிஜுவை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் 2008 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இப்போது, இருவரும் தங்கள் 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story






