

சென்னை,
மூன்று நாட்களுக்கு முன்பு, நடிகை அதிதி ராவ், யாரோ ஒருவர் வாட்ஸ்-அப்' மூலமாக போட்டோகிராபர்களை தொடர்புகொண்டு, தான் பேசுவது போல போட்டோஷூட்' குறித்து பேசி வருவதாக தெரிவித்தார். அது தான் இல்லை எனவும் இவ்வாறு தொடர்புகொள்ள மாட்டேன் எனவும் தெளிவுபடுத்தினார்.
இப்போது, நடிகை ஸ்ரேயா சரண் அதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். வாட்ஸ்அப்பில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி யாரோ ஒருவர் மக்களைத் தொடர்பு கொண்டு வருகிறார் எனவும் தான் இதில் ஈடுபடவில்லை என்பதையும் கூறினார்.