மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா சமந்தா?


After oo solriya...Samantha dances again for a special song?
x
தினத்தந்தி 9 Aug 2025 9:59 AM IST (Updated: 9 Aug 2025 10:05 AM IST)
t-max-icont-min-icon

'பெத்தி' படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

''புஷ்பா'' படத்தில் இடம்பெற்ற ''ஊ சொல்றியா'' பாடலில் நடனமாடி கவனம் ஈர்த்த சமந்தா, தற்போது மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்தில் ஒரு சிறப்பு பாடல் உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், தற்போது அதில் சமந்தா, ராம் சரணுடன் நடனமாட உள்ளதாக வெளியாகி உள்ள கிசுகிசுவால், 'பெத்தி' படத்தை பற்றிய பரபரப்பு அதிகரித்துள்ளது.

திட்டமிட்டபடி விஷயங்கள் நடந்தால், ''ரங்கஸ்தலம்'' படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் படமாக இது அமையும்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வரும் 'பெத்தி' படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story