'அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன்... தூங்கவே முடியவில்லை' - மணிகண்டன்


After watching Annabelle i couldnt even able to sleep - Manikandan
x
தினத்தந்தி 3 Jun 2025 2:37 PM IST (Updated: 24 Jun 2025 8:01 PM IST)
t-max-icont-min-icon

பேய் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பயம் என்று மணிகண்டன் கூறி இருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன், பேய் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பயம் என்றும் அந்த படங்களை பார்க்க மாட்டேன் எனவும் கூறி இருக்கிறார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மணிகண்டன்,

'பேய் படங்களுக்கு நான் ரொம்ப பயப்படுவேன். 'அன்னாபெல்' படத்திற்கு தெரியாமல் போய்விட்டேன். பார்த்துவிட்டு, தூங்கவே முடியவில்லை. எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் எழுத்தாளராக என்னுடைய முதல் படம் பீட்சா 2. பேய் படங்களில் நடிக்க வேண்டும், அந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், பார்க்க மட்டும் மாட்டேன்' என்றார்.

'காலா', 'ஜெய்பீம்', 'சில்லு கருப்பட்டி', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர், மணிகண்டன். 'குட்நைட்', 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

1 More update

Next Story