ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம்

இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
திருவள்ளூர்,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இவர் 'வை ராஜா வை மற்றும் லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கினார். அதிலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இதற்கிடையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நேற்று இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்றும் தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story






