'அமைதியாக இருப்பதால்'...விவாகரத்து வதந்திகளுக்கு பிரபல நடிகை பதில்


Aishwarya Sharma Hits Back At Trolls Amid Divorce Buzz
x
தினத்தந்தி 18 Nov 2025 6:01 PM IST (Updated: 18 Nov 2025 6:49 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகை ஐஸ்வர்யா சர்மா விவாகரத்து பெறுவதாக செய்திகள் வெளிவந்தன.

சென்னை,

இப்போதெல்லாம் விவாகரத்து என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில், பிரபல நடிகை ஐஸ்வர்யா சர்மா விவாகரத்து பெறுவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், தனக்கு எதிராக பரவி வரும் விவாகரத்து செய்திகளுக்கு பதிலளித்த ஐஸ்வர்யா சர்மா , உண்மை தெரியாமல் என் வாழ்க்கையைப் பற்றி பரப்புவதாக அவர் கோபமடைந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ’மக்கள் உண்மை தெரியாமல் என் வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள். எனக்கு நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து இப்படிதான் செய்கிறார்கள். ஆனாலும், நான் அதை புன்னகையுடன் கடந்து செல்கிறேன். அமைதியாக இருப்பதால் நான் ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தமல்ல. எதிர்மறையை ஊக்குவிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்' என விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு ஐஸ்வர்யா சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா சர்மாவும், நீல் பட்டும் 2021 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் 'ஸ்மார்ட் ஜோடி' மற்றும் 'பிக் பாஸ் 17' போன்ற ரியாலிட்டி ஷோக்களில் தோன்றினர். இருப்பினும், இருவரும் வெளியே ஒன்றாகக் காணப்படாததால், விவாகரத்து வதந்திகள் வெளியே வர தொடங்கின. இந்த சூழலில்தான் ஐஸ்வர்யா சர்மா பதிலளித்தார்.

1 More update

Next Story