அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த இந்தியாவின் முதல் எப்1 வீரர்

அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த இந்தியாவின் முதல் எப்1 வீரர்
Published on

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரரும், இந்தியாவின் முதல் எப் 1 வீரருமான நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கவுரவமானது. நரேனுடன் சேர்ந்து 'ஆசிய லீ மான்ஸ்' தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com