விஜய்யின் 'சச்சின்' படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ஹிட் படம்


விஜய்யின் சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ஹிட் படம்
x

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன. அந்த வகையில், கடந்த 2005-ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்' வருகிற ஏப்ரல் 18-ந் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது.

அதை தொடர்ந்து அஜித்குமாரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அஜித் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் தபு, ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி, அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்த இப்படம் மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story