அகண்டா 2...தமன் பகிர்ந்த முக்கிய அப்டேட்

இப்படம் பல மொழிகளில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா) நடித்துள்ள அகண்டா 2: தாண்டவம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். இப்படம் பல மொழிகளில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பாலையா நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், இசையமைப்பாளர் தமன் முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார். அதன்படி படத்தின் இசைப்பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடிக்கிறார்.
Related Tags :
Next Story






