ரூ.100 கோடி வெற்றி படத்தை தவறவிட்ட அகில்...

அகில், தற்போது 'லெனின்' படத்தில் நடித்து வருகிறார்.
Akhil, who missed out on a Rs. 100 crore hit,...
Published on

சென்னை,

'ஏஜென்ட்' படத்தின் படு தோல்வியால் படங்களில் இருந்து சிறிது இடைவெளி எடுத்த அகில், தற்போது 'லெனின்' படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில், அகில் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தி இப்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீகாந்த் ஒடெலாவின் முதல் படம் தசரா. இந்த படத்தில் முதலில் அகில்தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். இந்தக் கதையை எழுதிய ஒடெலா, முதலில் ஸ்கிரிப்டை அகிலிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அகில் நோ சொல்லி உள்ளார்.

அதன் பின் ஸ்ரீகாந்த் ஒடெலா இந்தப் படத்தில் நானியை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்ல, தனது முதல் படத்திலேயே ரூ.100 கோடி கிளப்பில் இடம்பிடித்த இயக்குநரானார் ஸ்ரீகாந்த் ஒடெலா . இந்தப் படம் மட்டுமல்ல, அகில் மற்றொரு ஹிட் படத்தையும் தவறவிட்டதாக சமூக ஊடகங்களில் பேச்சு உள்ளது.

கிரண் அப்பாவரம் நடித்த 'கா' படத்தின் கதையும் முதலில் அகிலிடம் சொல்லப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஏதோ காரணத்தால் அகில் அந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கினார். இதன் மூலம், படம் கிரணின் கைக்குச் சென்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com