

சென்னை,
ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், சர்வதேச பிரபலங்கள் உட்பட பலர் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவதால், இது இன்னும் பிரபலமாகி உள்ளது.
இந்தப் பட்டியலில் தற்போது ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இணைந்துள்ளார். அவரது புதிய படமான 'நவ் யூ சீ மீ: நவ் யூ டோன்ட்' இன்று திரையரங்குகளில் வெளியாகிவுள்ள நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' குறித்து பகிர்ந்து கொண்டார்.
"ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நம்பமுடியாததாக அளவுக்கு இருந்தது. ஒவ்வொரு அமெரிக்கரும் ஆர்.ஆர்.ஆரைப் பார்த்திருப்பார்கள்," என்று அவர் கூறினார்.
அவரது கருத்து,'ஆர்.ஆர்.ஆர்' படம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதையும், ராஜமவுலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளதையும் மீண்டும் ஒருமுறை காட்டி இருக்கிறது.