ஆனந்த் நாக் நடிக்கும் “அறிவான்” படத்தின் டிரெய்லர் வெளியீடு
எஸ். அருண் பிரசாத் இயக்கத்தில் ஆனந்த் நாக் நடிக்கும் ‘அறிவான்’ படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'வெற்றிவேல் ' மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் நடிகர் ஆனந்த் நாக்.
எஸ். அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறிவான்’ திரைப்படத்தில் ஆனந்த் நாக், ஜனனி குணசீலன், 'பாய்ஸ்' ராஜன், பிர்லா போஸ் ,கௌரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் .இரா இசையமைத்திருக்கிறார். இவர் ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் பணியாற்றியவர். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் துரை மகாதேவன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ சி எம் சினிமாஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் "அறிவான்" படத்தின் கதை.
இந்நிலையில், ஆனந்த் நாக் நடிக்கும் ‘அறிவான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லரில் காவல்துறை அதிகாரி ஒருவர் குற்ற சம்பவம் குறித்த புலனாய்வு மேற்கொள்வது தொடர்பான காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம் பிடித்திருப்பதால் திரில்லர் ஜேனரிலான படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. ‘அறிவான்’ படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.







