'அவர் என் செலிபிரிட்டி கிரஷ்' - நடிகை அனன்யா


Ananya Nagalla is obsessed with this pan-Indian star
x

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘மல்லேஷம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மல்லேஷம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீகாகுளம் ஷெர்லாக்ஹோல்ம்ஸ், டார்லிங், பொட்டல், அன்வேஷி, பிளே பேக், வக்கீல் சாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது செலிபிரிட்டி கிரஷ் யார் என்பதை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

'எனக்கு சிறு வயதிலேயே பிரபாஸ் மீது பிரியம் ஏற்பட்டது. எலோருக்கும் பாகுபலிக்கு பின்னர்தான் பிரபாசை பிடிக்க ஆரம்பித்திருக்கும். ஆனால், எனக்கு அவர் 2004-ம் ஆண்டு நடித்த 'வர்ஷம்' படத்திலிருந்தே பிடிக்கும். அவர் என் செலிபிரிட்டி கிரஷ்," என்றார்.


1 More update

Next Story