'அன்கில்_123' ...வைரலாகும் அனுராக் காஷ்யப்பின் பர்ஸ்ட் லுக்

இப்படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.
சென்னை,
ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், 'அன்கில் _123' என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.
இதில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.
அனுராக் காஷ்யப் உடைந்த கண்கண்ணாடியுடன் இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். தலைப்பு மற்றும் போஸ்டரைப் பார்க்கும்போது, அனுராக் இப்படத்தில் வில்லனாக நடிப்பதுபோல் தெரிகிறது.
இருப்பினும், அவரது கதாபாத்திரம் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வ விவரங்களை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.
’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ’கூர்கா’ , 'டார்லிங்' மற்றும் ’பட்டி’ போன்ற படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






