மத்தூர் வன்முறைக்கு காரணம் இந்துக்களா?...மந்திரி கருத்துக்கு நடிகை கடும் எதிர்ப்பு

மந்திரி பரமேஸ்வர் கருத்துக்கு கன்னட நடிகை காவ்யா சாஸ்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு,
மண்டியா மாவட்டம் மத்தூரில் கடந்த 7-ந்தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைக்கு இந்துக்களே காரணம் என கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கருத்து கூறியிருந்தார். இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மந்திரி பரமேஸ்வருக்கு கன்னட நடிகை காவ்யா சாஸ்திரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட பதிவில், '' மத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த வன்முறைக்கு இந்துக்களே காரணம் என போலீஸ் மந்திரி கூறுகிறார். ஒரு மந்திரியாக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்'' என்று கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு இணையதள வாசிகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story






