சர்வானந்தின் 36-வது பட அப்டேட்


As a bike racer, Sharwanand is sure to captivate
x

சர்வானந்த், தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சென்னை,

பிரபல இளம் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் தற்போது தனது 36-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இந்த படத்தை அபிலாஷ் கங்காரா இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மாளவிகா நாயர் கதாநாயகியாக நடிக்க, பிரம்மாஜி மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சூழலில், இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story