ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்...டீசர் வெளியானது


Ashika Ranganaths new film...teaser released
x

இந்த படம் நவம்பர் 14 -ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் புதிய படம் ''கதவைபவா''. துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 14 -ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை சர்வகாரா சில்வர் ஸ்க்ரீன்ஸ் மற்றும் சுனி சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் தீபக் திம்மப்பா மற்றும் சுனி இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜூடா சாந்தி இசையமைக்க வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தியுடன் 'சர்தார் 2', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story