'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

திருமலை தயாரித்துள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த திரைப்படம் கடந்த 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதால் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற 22-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com