அதர்வா நடித்துள்ள "டி.என்.ஏ" படத்தின் "பீலிங் பாட்டு" பாடல் வெளியீடு

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'டி.என்.ஏ' படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

'பாணா காத்தாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி 'டி.என்.ஏ' திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 'டி.என்.ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'டி.என்.ஏ' படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'டி.என்.ஏ' படத்தின் 'பீலிங் பாட்டு' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டாவது பாடலை சகி சிவா எழுதி, இசையமைத்துள்ளார்.

குபேரா படமும் டி.என்.ஏ படமும் 20-ந் தேதி தேதி திரைக்கு வர உள்ளதால், 2 படத்துக்கும் இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com