“ஆட்டோகிராப்” டிரெய்லர் வெளியீட்டு விழா- சேரனை பார்த்து சினேகா கேட்ட கேள்வி


“ஆட்டோகிராப்” டிரெய்லர் வெளியீட்டு விழா- சேரனை பார்த்து சினேகா கேட்ட கேள்வி
x

என்னோட‘பெஸ்ட் பிரண்ட்’ சேரன்தான் என்று ‘ஆட்டோகிராப்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சினேகா கூறினார்.

சென்னை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் ஹிட்டானது. ஆட்டோகிராப் வெளியான போது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

இந்தநிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆட்டோகிராப்’ படம் டிஜிட்டல் ஆண்டுகளுக்கு ஆண்டுக முறையில் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சேரன், அமீர், பாண்டிராஜன், ஜான்மில்டன் ராமகிருஷ்ணன், ஜெகன், நடிகை சினேகா உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகை சினேகா “இந்த நேரத்தில் சோனிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இதில் உங்களை பாதித்தது எது, எத்தனை காதல் உங்களுக்கு இருந்தது? என நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆட்டோகிராப் நிறைய விஷயத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தது. படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு நிறைய மன அழுத்தம் தனிப்பட்ட முறையில் இருந்தது. அது யாருக்குமே தெரியாது. வெளியில் சிரித்துக்கொண்டேஇருப்பேன். என்னுடைய மன கஷ்டத்தை கண்டுபிடித்த ஒரே நபர் சேரன். படப்பிடிப்பு தளத்தில் த்தில் ஒருநாள் அமர்ந்திருந்த போது சேரனுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. என் அருகில் வந்து அமர்ந்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.

நான் ஒன்றும் இல்லை என கூறினேன். அதற்கு அவர் இல்லை... இல்லை... ஏதோ பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். எல்லாம் சரியாகிவிடும் 'ஓ.கே' என கூறினார். அன்று நாங்கள் நண்பர்களானதுதான் இன்று வரை நண்பர்களாக இருக்கிறோம். என்னால் உறுதியோடு சொல்ல முடியும். என்னோட 'பெஸ்ட் பிரண்ட்' யார் என்றால்? சேரன் தான். எல்லோரும் கேட்பார்கள், ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா? என கேட்பார்கள். ஆனால் நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். நீங்கள் நடித்ததில் பிடித்த படம் எது என்று என்னிடம் கேட்டால் ‘ஆட்டோகிராப்’ என சொல்வேன்.” என்று கூறினார்.

சேரன் “எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து படம் எடுத்தோமோ அந்த உழைப்பின் பலன் 21 வருடம் கழித்து ' மீண்டும் கிடைக்கிறது. எல்லோரும் இந்த படம் எப்போ வருகிறது என எதிர்பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஒரு நல்ல படம் வந்திருக்கிறதா? நல்ல படத்தை பார்த்து விட மாட்டோமா? மீண்டும் குடும்பத்தோட கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு போக மாட்டோமா என்ற ஏக்கம் இருக்கிறது. தற்போது திரை உலகம் என்றாலே வெட்டு, குத்து என்று போய்விட்டது. அதை தாண்டி இதுபோன்ற நல்ல படத்துக்கு ஆதரவு தாருங்கள்” என்றார். சேரனிடம், சினேகா உங்களுக்கு எத்தனை காதல் என கேட்டபோது, கேட்டாரே? அதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்ட அவரது கேள்விக்கு இன்னொரு மேடையில் பதிலளிக்கிறேன் என கூறினார்.

1 More update

Next Story