அனுபமா நடிக்கும் திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


Bellamkonda Sreenivas-Anupama Parameswaran’s thriller titled Kishkindapuri
x
தினத்தந்தி 27 April 2025 5:27 PM IST (Updated: 18 Jun 2025 7:48 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 29-ம் தேதி இப்படத்தின் கிளிப்ஸ் வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.

தற்போது இவர் பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும், கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படத்திற்கு 'கிஷ்கிந்தாபுரி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 29-ம் தேதி இப்படத்தின் கிளிப்ஸ் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story