'காந்தா' - பாக்யஸ்ரீ போர்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்


Bhagyashri Borse looks enchanting as ‘Kaantha’!
x

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஐதராபாத்,

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியன் 2' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அதனைத்தொடர்ந்து சந்து சாம்பியன், ரவி தேஜா நடிப்பில் வெளியான மிஸ்டர் பச்சான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, பாக்யஸ்ரீ போர்ஸ், ராம் பொத்தினேனியுடன் நடித்து வருகிறார். இப்படத்தை மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார்.

இதுமட்டுமில்லாமல், துல்கர் சல்மானுடன் காந்தா படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story