சசிகுமார் படத்தில் வில்லியாக நடிக்கும் பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் 9வது சீசனில் கலந்து கொண்ட கெமி என்ற வைஷாலி கெம்கர் ‘மை லார்ட்’ படத்தில் நடித்துள்ளார்.
சசிகுமார் படத்தில் வில்லியாக நடிக்கும் பிக்பாஸ் நடிகை
Published on

ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான கெமி பிக்பாஸ் 9வது சீசனில் கலந்து கொண்டு 49வது நாளில் வெளியேற்றப்பட்டார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் மை லார்ட் படத்தில் நடித்து வருகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

பிக்பாஸ் கெமி நேர்காணலில் சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார். தற்போது நான் 2 படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அதில் ஒன்று ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறேன். அந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஒரு பாடல் கூட ரிலீசாகி விட்டது. இந்த நெகட்டிவ் கேரக்டர் எனக்கே ரொம்ப புதிதானது. அதுதான் முதலில் ரிலீசாக உள்ளது.

அடுத்ததாக நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தில் இடம் பெற்றுள்ளேன். இதில் வேடிக்கையான ஒரு கேரக்டர் பண்ணுகிறேன். படத்தில் நிறைய காட்சிகளில் நான் வருவேன். முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது. அவர்களுடன் நான் ஷூட்டிங்கில் இருந்த அனுபவம் ரொம்ப நன்றாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். எனக்கு சினிமா என்பது புது அனுபவம் தான். கவின் நடிக்க சொல்லி கொடுத்த விதம், நயன்தாரா எங்களுடன் சகஜமாக இருந்த விதம் எல்லாம் சிறப்பாக இருந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடிக்க உள்ளது. 2026ல் ஹாய் படம் வெளியாகும். நானும் அந்த படத்துக்காக ரொம்ப வெயிட் பண்றேன் என கெமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com