பிக் பாஸ் நடிகையின் 'கர்மஸ்தலம்'... பிரமிக்க வைக்கும் புதிய போஸ்டர்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Bigg Boss actress's 'Dharmasthalam'... A stunning new poster!
Published on

சென்னை,

தெலுங்கு பிக் பாஸ் நடிகை திவி வத்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் பான் இந்திய படமான 'கர்மஸ்தலம்' படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட போஸ்டர் திவியை ஒரு சக்திவாய்ந்த போர்வீராங்கனையாக காட்டுகிறது.

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராக்கி ஷெர்மன் இயக்கியுள்ள இந்த படத்தை சாம்ராட்னி பிலிம்ஸ் மற்றும் ராய் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் ஹர்ஷ் வர்தன் ஷிண்டே தயாரிக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. பிக் பாஸ் திவி வாத்யாவைத் தவிர, பிரபல நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com