புதிய வீடு கட்டி வரும் பிக்பாஸ் ஜோடி


புதிய வீடு கட்டி வரும்  பிக்பாஸ் ஜோடி
x

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவனி ஜோடி திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது.

சென்னை,

சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியின் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது. இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவனியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார். 3 ஆண்டுகளாக காதலித்து வந்த, இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர்.

அமீர் - பாவனி ஜோடி திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நடிகை பாவனி தனது இன்ஸ்டாவில் புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பாவனி-அமீர் ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

1 More update

Next Story