'தண்டேல்' படத்தின் 'புஜ்ஜி குட்டி' பாடல் வெளியானது
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. 2-வது பாடலான 'நமோ நமச்சிவாய' பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், 'தண்டேல்' படத்தின் 3-வது பாடலான 'புஜ்ஜி குட்டி' வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story







