கதைக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்யலாம் - விஜய் தேவரகொண்டா


கதைக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்யலாம் - விஜய் தேவரகொண்டா
x

போலீசாக நடிப்பது கொஞ்சம் சவாலாக இருந்தாலும், நல்லபடியாக செய்துள்ளேன் என்று விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கவுதம் தின்னாநூரி இயக்கத்தில் நடித்துள்ள 'கிங்டம்' படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.

சென்னையில் நடந்த பட விழாவில் விஜய் தேவரகொண்டா பங்கேற்று பேசும்போது, 'கிங்டம்' படம் கிளாசிக் ஆக்ஷன் வகை படமாக இருக்கும். சொல்லப்போனால், பழைய ரஜினியின் படங்கள் போல இருக்கும். இந்த படத்தின் டீசருக்கு தமிழில் குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி. கரடுமுரடாக இருக்கும் நான் படங்களில் காதல் காட்சிகளில் மென்மையான நடிப்பை வெளிப்படுத்துவது எப்படி? என்று கேட்கிறார்கள். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக, நேர்மையாக செய்கிறேன். அவ்வளவுதான். அதுதான் என் சிறப்பு.

எனது தோற்றம் இயக்குநர்களால் வடிவமைக்கப்படுகிறது. எனது தோற்றத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள். கதைக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்யலாம். போலீசாக நடிப்பது கொஞ்சம் சவாலானதுதான் இருந்தாலும், நல்லபடியாக செய்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் இங்குள்ளவர்களின் நுணுக்கமான கேள்விகளுக்கு நான் சொல்லும் பதில்கள் வைரலாகி விடுகின்றன, என்று கூறினார்.

1 More update

Next Story