முதல் படத்திலேயே முத்திரை பதிப்பாரா சோனாக்சி சின்ஹா?

"ஜடதாரா" படத்தின் மூலம் சோனாக்சி சின்ஹா தெலுங்கில் அடியெடுத்து வைக்கிறார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான சோனாக்சி சின்ஹா, தற்போது சுதீர் பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் "ஜடதாரா" இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அடியெடுத்து வைக்கிறார்.
தெலுங்கு-இந்தி என இருமொழிகளில் உருவாகும் "ஜடதாரா" படத்தில், சோனாக்சி தனா பிசாச்சி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார், வசீகரம் மற்றும் அச்சுறுத்தல் இரண்டையும் கலந்த இந்த கதாபாத்திரம் பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள் பிரண்ட்” படத்துடன் மோதுகிறது. "ஜடதாரா" சோனாக்சி சின்ஹாவுக்கு தெலுங்கில் தனது முத்திரையைப் பதிக்க உதவுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Related Tags :
Next Story






