"மில்லர்" படத்தின் டைட்டிலில் மாற்றம்

இப்படத்தின் டைட்டில் தொடர்பாக பல சர்ச்கைகள் எழுந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் தயாரிப்பில் "மில்லர்" என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை பூவன் மதீசன், ராஜ் சிவராஜ் ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர்.
இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் 26ந் தேதி இலங்கையில் நடைபெற்றது. அதில் வைரமுத்து, சிங்கம்புலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கந்தையா பாஸ்கரனின் மகன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பாக பல சர்ச்கைகள் எழுந்த நிலையில், "மில்லர்" பட தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் டைட்டிலை "போராட்டம்" என்று மாற்றி உள்ளது.
Related Tags :
Next Story






