சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் - "நான் ஓட்டு போட கூடாதா?" - ரவீனா வருத்தம்


Chinnathirai nadigar sangam election - Not Allowed to Vote - Actress Raveena Taha
x
தினத்தந்தி 10 Aug 2025 12:30 PM IST (Updated: 10 Aug 2025 12:31 PM IST)
t-max-icont-min-icon

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது.

சென்னை,

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தன்னை வாக்களிக்க விடவில்லை என்று நடிகை ரவீனா தாஹா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.

தேர்தலில் நடிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வரும்நிலையில், நடிகை ரவீனா தாஹா, தன்னை வாக்களிக்க விடவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், ''`ரெட் கார்ட்' வழங்கப் பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. `ரெட் கார்ட்' இருந்தால் போட்டியிடதான் முடியாது, வாக்களிக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது'' என்றார்.

1 More update

Next Story