''சினிமா ஒன்றும் அழிந்து விடாது' - விஜய் குறித்த கேள்விக்கு கருணாஸ் பதில்


Cinema will not be destroyed - Karunass reply to a question about Vijay
x
தினத்தந்தி 28 Dec 2025 2:00 PM IST (Updated: 28 Dec 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் பதில் கூறி இருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது ’ஜன நாயகன்’ படத்தில் நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இது விஜய்யின் கடைசி படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்நிலையில், விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் பதில் கூறி இருக்கிறார். அவர் பேசுகையில்,

''சினிமா ஒன்றும் அழிந்து விடாது, என்னை போன்ற பலரை வளர்த்து விட்ட சினிமா தான். அது அப்படியேதான் இருக்கும். யாருக்காகவும் காத்திருக்காது'' என்றார்.

1 More update

Next Story