"கூலி" - அமீர்கானின் சிறப்பு தோற்றம் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
"கூலி" - அமீர்கானின் சிறப்பு தோற்றம் வெளியீடு
Published on

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ''கூலி'' படத்தின் முதல் பாடலான ''சிக்கிடு'' சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையமைத்த இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில், 15 நிமிட கேமியோ வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் 'தாஹா' என்ற கதாபாத்திர போஸ்டரை சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com