மோனிகா பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த கூலி படக்குழு

கூலி படத்தின் மோனிகா பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மோனிகா பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த கூலி படக்குழு
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் போட்டிருப்பார். இப்பாடலை விஷ்ணு ஏதவன் எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் ரப் செய்துள்ளார். இந்த நிலையில் பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com