"கூலி" படத்தின் "பவர் ஹவுஸ்" பாடல் வெளியானது


கூலி படத்தின் பவர் ஹவுஸ் பாடல் வெளியானது
x
தினத்தந்தி 22 July 2025 7:10 PM IST (Updated: 9 Aug 2025 7:06 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.

சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, 'கூலி' படத்தின் 3வது பாடலான 'பவர் ஹவுஸ்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் 'பவர் ஹவுஸ்' பாடல் இன்று இரவு 9.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் அவர் பாடவும் இருக்கிறார்.

1 More update

Next Story