'கூலி' பாடல் 'காவாலா'போல இருக்குமா? - பூஜா ஹெக்டே பதில்


Coolie song wont be like Kaawala - Pooja Hegde
x
தினத்தந்தி 16 April 2025 3:51 PM IST (Updated: 6 May 2025 7:10 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார்.

சென்னை

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாகவும் , ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியும் இருக்கிறார். இதற்கிடையில், ரெட்ரோ படத்தின் புரமோசனில் தற்போது பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரிடம், 'கூலி' படத்தில் நடனமாடியிருக்கும் பாடல் 'காவாலா'போல இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'கூலி' படத்தில், 'காவாலா' பாடல்போல இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன், தனித்துவமான வைப் இருக்கும். ரசிகர்கள் நிச்சயம் அதை கொண்டாடுவார்கள்' என்றார்.

1 More update

Next Story