நந்தமுரி பாலகிருஷ்ணாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமான 'டாகு மகாராஜ்'?


Daku Maharaj is the highest grossing film of Nandamuri Balakrishnas career.
x
தினத்தந்தி 1 Feb 2025 3:25 PM IST (Updated: 4 Feb 2025 4:26 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடித்திருக்கிறார்.

'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'டாகு மகாராஜ்' படைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ரூ. 132 கோடி வசூலித்தநிலையில், இந்த சாதனையை தற்போது 'டாகு மகாராஜ்' முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story