'தங்கல்' என் கெரியரில் பல கதவுகளைத் திறந்தது - நடிகை சன்யா மல்ஹோத்ரா


Dangal Opened Many Doors, Says Sanya Malhotra
x

நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளி்யான படம் ’தங்கல்’

மும்பை,

அமீர் கான், சாக்சி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளி்யான படம் 'தங்கல்'. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான தங்கல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படமாகவும் இது உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த சன்யா மல்ஹோத்ரா, 'தங்கல்' தன் கெரியரில் பல கதவுகளைத் திறந்ததாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'எந்த துறையிலும் கடின உழைப்பு என்பது இன்றியமையாதது. எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சினிமாவில், அதைவிட சரியான நேரத்தில் சரியான வாய்ப்பைப் பெறுவதுதான் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அப்படி சரியான நேரத்தில் எனக்கு கிடைத்ததுதான் 'தங்கல்'. அது என் கெரியரில் பல கதவுகளைத் திறந்தது' என்றார்.

1 More update

Next Story