அமிதாப்பச்சன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்த தீபிகா படுகோனே

'தி இன்டர்ன்' என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருந்த தீபிகா படுகோனே அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மும்பை,
பிரபல ஹாலிவுட் படமான 'தி இன்டர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. கடந்த 2015-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் 2020-ம் ஆண்டு தொடங்கியது. இந்த படத்தில் ரிஷிகபூர், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ரிஷிகபூர் மரணமடைந்ததால் அவருக்கு பதில் அமிதாப்பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில் தீபிகா படுகோனே படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தீபிகா படத்தில் நடிப்பதில் இருந்து மட்டும் விலகி தயாரிப்பாளராக பணியாற்றுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய கதாநாயகி தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story






