12 வருடங்கள் கழித்து...ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் பாலிவுட் படம்


Dhanushs Bollywood film to be re-released after 12 years
x

கடந்த 2013ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் 'ராஞ்சனா'.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் 'ராஞ்சனா'.

இந்த படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். வரவேற்பை . அதன் பிறகு தனுஷ் இந்தியில் ஷமிதாப், அட்ராங்கி ரே படங்களில் நடித்தார். தற்போது தேரே இஸ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'ராஞ்சனா' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 வருடங்களைக் கடந்த நிலையில் இப்படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. அதன்படி, வருகிற 28ம் தேதி இப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.


1 More update

Next Story