தனுஷின் “இட்லி கடை” படத்தின் “எஞ்சாமி தந்தானே” வீடியோ பாடல் வெளியானது

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் கொடுத்து வருகிறது.

இப்படத்திலிருந்து "என்ன சுகம்" என்ற வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கான வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். பாடகி சுவேதா மேனனுடன் இணைந்து அவரே இந்த பாடலை பாடியும் உள்ளார்.

இந்த நிலையில், இட்லி கடை படத்திலிருந்து எஞ்சாமி தந்தானே பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை தனுஷ் வரிகளில் தனுஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com