“தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்” அட்டைப்படத்தில் துருவ் விக்ரம்


“தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்” அட்டைப்படத்தில் துருவ் விக்ரம்
x
தினத்தந்தி 18 Dec 2025 3:58 PM IST (Updated: 18 Dec 2025 4:05 PM IST)
t-max-icont-min-icon

துருவ் விக்ரம், இந்தியாவின் 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சியான் விக்ரம் தமிழில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து வருகின்றார். விக்ரமின் மகனான துருவ் விக்ரமும் தற்போது ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகின்றார். சியான் விக்ரமின் மகனான துருவ் முதலில் பாலாவின் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரமுக்காகவும், துருவ்வுக்காகவும் ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டு தனது ஸ்டைலில் படமாக்கியிருந்தார் பாலா. ஆனால் அந்தபடம் விக்ரமுக்கு பிடிக்காததால் வேறு ஒரு இயக்குநரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்து 2019 ல் வெளியிட்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் சேர்ந்து ‘மகான்’ படத்தில் நடித்தார். ஆறு வருடங்களில் துருவ் இரண்டே படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இது அவரது மூன்றாவது படமாகும். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, துருவ் விக்ரம் இந்தியாவின் 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ அட்டைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், நடிகைகள் கிருத்தி சனோன், ருக்மிணி வசந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் துருவ் விக்ரமும் இடம்பிடித்துள்ளார்.

1 More update

Next Story