’வாய்ப்பு தர மூக்கு, பற்களை சரி செய்ய சொன்ன இயக்குனர்’ - பகிர்ந்த பிரபல நடிகை

துரந்தர் படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் ஆயிஷா கான் நடித்திருக்கிறார்.
Dhurandhar's Ayesha Khan says she was told to 'fix' her nose, teeth for roles
Published on

சென்னை,

பாலிவுட் நடிகை ஆயிஷா கான். தற்போது இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருப்பினும், அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், அவரது தோற்றம் குறித்து நிறைய எதிர்மறையான கருத்துகளைப் பெற்றார். சமீபத்திய ஒரு நேர்காணலில், ஆயிஷா இது பற்றி கூறினார். அவர் கூறுகையில், ஒருவர் என் மூக்கை சரிசெய்யச் சொன்னார். நான் ஆச்சரியப்பட்டேன். எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். அறுவை சிகிச்சை செய்யச் சொல்ல அவர் யார்?

ஒருமுறை நான் ஒரு திகில் படத்திற்கான ஆடிஷனுக்குச் சென்றேன். அவர் ஒரு பிரபல இயக்குனர். ஆடிஷன் முடிந்தது. அங்கிருந்தவர்கள் என்னை நிச்சயமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னார்கள். அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் இது ஒரு திகில் படம் என்பதால் பரவாயில்லை, இல்லையென்றால், உங்கள் பற்களை சரிசெய்ய வேண்டும் என்று இயக்குனர் சொன்னார் என்றார்.

ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் துரந்தர். ஆதித்யா தர் இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பண மழை பொழிந்து வருகிறது. இது ரூ. 200 கோடி கிளப்பில் நுழையத் தயாராக உள்ளது. இந்தப் படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் ஆயிஷா கான் நடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com